×

தமிழகத்தில் இந்த மாதம் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாக வாய்ப்பு.!! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இந்த மாதம் (ஜூலை, 2026) வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. தமிழகத்தில் இந்த ஜூலை மாதம் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளதால், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தாலும், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் வழக்கத்திற்கு மாறாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் மற்றும் மதுரை ஆகிய உள்மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகமாக (சுமார் 40° C முதல் 44° C வரை) இருக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

அதே நேரம் சென்னை போன்ற கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை ஓரளவு குறைவாக இருந்தாலும், கடுமையான வெப்பமும் 36° C வரையிலான பகல் நேர வெப்பநிலையும், அதனுடன் அதிகப்படியான ஈரப்பதமும் நிலவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டு உள்ளது. மொத்தத்தில் மாநிலம் முழுவதும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகவே இருக்கும் என்று எச்சரித்து உள்ளது. வழக்கமாக மே மாதத்துடன் முடிவடையும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் நீடிக்க வலுவடையும் எல் நினோ, குறைவான பருவமழை மற்றும் மேகமூட்டமின்மை, வலுவான மேற்குத் திசைக் காற்று உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags : Tamil Nadu ,India Meteorological Department ,Chennai ,
× RELATED ஹோர்முஸ் நீரிணையில் மெல்ல மெல்ல...