×

ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் கடும் வெப்ப அலை.. 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பாரிஸ்: ஐரோப்பாவில் கோடைக்காலத்தின் தொடக்கத்திலேயே ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்ப அலை, நூற்றுக்கணக்கானோர் கூடுதலாக உயிரிழக்க காரணமாக அமைந்திருக்கலாம் என WHO தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் வீசி வரும் கடும் வெப்பஅலை காரணமாக, ஃபிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் வரை மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஜூன் 21, 2026 முதல் வீசி வரும் கடுமையான வெப்ப அலையின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதீ தீவிர வெப்பத்திற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் உயிரிழத்தவர்களில் சுமார் 85 சதவீதம் பேர் 65 வயதிற்கு மேற்பட்டோர் ஆவர். அதே போல ஜெர்மனியில் வெயிலின் தாக்கம் 41.5 டிகிரி செல்சியஸை எட்டி உள்ளதால் காட்டு தீ பரவி வருகிறது. தலைநகர் பெர்லினில் வெப்பத்தை தணிக்க போராட்டக்காரர்களை கலைக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் பீரங்கிகளை கொண்டு பொதுமக்களின் மேல் குளிர்ந்த நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி தவிர போலந்து மற்றும் செக் குடியரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் வெப்பநிலையில் புதிய உச்சங்கள் பதிவாகின. புவி வெப்பமயமாதல் காரணமாக தீவிர காலநிலை மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனிடையே பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமார் 1,000 உயிரிழப்புகள் கூடுதலாக பதிவாகி உள்ளன.

Tags : Paris ,Europe ,WHO ,France… ,
× RELATED பால் விநியோகத்தில் ஆவின் நிறுவனம்...