×

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

 

ஜப்பான்: ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் இவாடி மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாகாணத்தில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.25 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கதால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதேனும் ஏற்பட்டதா? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

Tags : Japan ,Iwadi, Japan ,Amman Province ,
× RELATED தவெக அமைச்சர் சரத்குமாரை பதவிநீக்கம்...