×

3 இல்ல 3,000 கிமீ ஓடினாலும் “நீங்க செஞ்ச பாவம்” தீராது – முதல்வருக்கு சாட்டை அடி.!!

சென்னை: சர்வேதச போதை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தமிழக முதல்வர் விஜய், போதைப்பொருளுக்கு எதிரான மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்து அவரும் சுமார் 3 கிமீ ஓடினார். ஓடுவதற்கு முன்னதாக விழா மேடையில் ‘ஸ்போர்ட்ஸ எடு ட்ரக்ஸ்-அ விடு’ என்ற தங்லீஷ் வாசகத்தை எழுதி போதை ஒழிப்பு விழிப்புணர்வு செய்தார்.

இந்தியாவிலேயே தற்போதைய தமிழக சிஎம் தான் மாரத்தானில் பங்கேற்று நீண்ட தூரம் ஓடியதாக அமைச்சர் ஆதவ் புகழ் பாடினார். உடனே தவெக தொண்டர்கள் மற்றும் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் என ஒரு பெருங்கூட்டமே அவரது பேச்சுக்கு புளாங்கிதம் அடைந்தது. ஆனால் இங்கே தான் அவர்கள் அனைவரும் ஒரு விஷயத்தை மறந்து விடுகின்றனர்.

அவரை தேவதூதன் போல நினைத்து வாழும் ரசிக கூட்டமும் மறந்து விடுகிறது. அவர்களின் அண்ணன்  திரையில் போதை வஸ்துக்களை சர்வசாதாரணமாக பயன்படுத்துவது போல் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் அவரது பாடல்களிலும் சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஊக்குவிப்பது போன்ற வரிகள் மிகவும் சகஜமாக இடம்பெற்றிருக்கும். இதை இன்றைய முதல்வரால் மறுக்க முடியுமா என்ன?

இதை தான் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரிபிரியா நினைவுபடுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்த வெச்சு புகை இழுத்தா பவர் கிக்” னு பாடி இளைஞர்களிடம் போதைப் பழக்கத்தை ஊக்குவித்த பாவத்திற்கு நீங்கள் 3 கிமீ இல்லை 3000கிமீ ஓடினாலும் தண்டனை நிறைவடையாது.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் விதமாக உள்ளது உங்கள் செயல். முதலில் இப்படியெல்லாம் பாடி சமூகத்தை சீரழித்ததற்கு பொதுவெளியில் மன்னிப்பு கேளுங்கள் திரு விஜய் அவர்களே,பிறகு போதைப் பழகத்தை எதிர்த்து பேசும் தகுதியை குறைந்தபட்சமாவது பெறுவீர்கள் என்று பலர் புத்தியிலும் உரைக்காத உண்மையை உரக்க சொல்லி உள்ளார்.

Tags : Chennai ,Tamil Nadu ,Vijay ,Sarvedasa Narcotics Abolition Day ,Sportsa ,Trux ,
× RELATED சென்னை உட்பட 6 மாவட்டங்களில் ஓரிரு...