சென்னை: தி.மு.க.வைப் போலவே, ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம் என வாழ்ந்து காட்டியவர் வி.பி.சிங் என மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது சமூக வலைதள பதிவில்;
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி வி.பி. சிங் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி… pic.twitter.com/0nYXDIU9Nf
— M.K.Stalin (@mkstalin) June 25, 2026
தி.மு.க.வைப் போலவே, ‘ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்’ என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார். நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்! என கூறியுள்ளார்.
