×

காஜல் அகர்வால் பகீர் கேரவனில் நுழைந்து அத்துமீறிய உதவி டைரக்டர்

 

சென்னை: தனக்கு நடந்த பகீர் சம்பவம் குறித்து காஜல் அகர்வால் தற்போது பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். அதில், நான் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக போயிருந்தேன். அப்போது பிரேக் நேரம் என்பதால் கேரவனில் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் கதவை கூட தட்டாமல் திடீரென கேரவனுக்குள் வந்துவிட்டார். அந்த நபர் சாதாரண ரசிகர் போல் வாழ்த்து சொல்ல வரவில்லை.

என் முன் தன்னுடைய சட்டையை கழட்டி மார்பில் குத்தியிருந்த டாட்டூவை காட்டினார். அந்த டாட்டூவில் இருந்தது என் பெயர் தான். இந்த சம்பவத்தை எதிர்ப்பார்க்காமல் அதிர்ச்சியடைந்தேன். திடீரென ஒருவர் வந்து தன் முன் சட்டையை கழட்டுவதை பார்த்து பயப்பட்டாலும், பின் நடந்தது எனக்கு பிடிக்காத அதிர்ச்சி என்று கூறியிருக்கிறார் காஜல்.

மேலும் எனக்கு ரசிகர்கள் மீது இப்போதும் எப்போதும் அன்பும் மரியாதையும் இருக்கிறது. ஆனால் ஒரு பெண் தனியாக இருக்கும் இடத்திற்கு அனுமதியில்லாமல் நுழைவது தவறு. யாராக இருந்தாலும் மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையையும் மதிக்க வேண்டும். ரசிகர் என்ற பெயரில் எல்லை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதே சமயம் தான் கோபப்படாமல் அமைதியாக அந்த உதவி இயக்குனரை எச்சரித்து வெளியேற்றியதாகவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

 

Tags : Kajal Aggarwal ,Chennai ,
× RELATED பிரபு இராமானுஜம் இயக்கத்தில் கருப்பட்டி