×

இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி

சென்னை: வி.கே.வி பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வடிவேலன் பி.ஜே., விமல்ராஜ் சிவசாமி இணைந்து தயாரிக்கும் படம், ‘இன்ஸ்பெக்டர் சூர்யா பேச்சுலர் பார்ட்டி’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஏ.ஆர்.சுரேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் எம்.சதீஷ் குமார், சோனியா தாஸ், நிஷா, ‘நன்னாரி’ வினோத், தீபா சங்கர், அசோக் பாண்டியன், ‘திருப்பாச்சி’ பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், பிர்லா போஸ், அஸ்மிதா, ஜெயந்தி மாலா, மணிமேகலை, செ.ரா.ராஜேஷ் நடிக்கின்றனர். ஜெயகுமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ்.கே இசை அமைக்கிறார். புவனேஸ் எடிட்டிங் செய்ய, ‘அசால்ட்’ மதுர சண்டைப் பயிற்சி அளிக்கிறார். சினேகன், ஏ.ஆர்.சுரேஷ் பாபு, பூவரசன், எம்.சதீஷ் குமார் பாடல்கள் எழுதுகின்றனர். செல்வராஜ் அரங்கம் அமைக்கிறார். திருவண்ணாமலை, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

Tags : Chennai ,Dr. ,Vadivelan PJ ,Vimalraj Sivasamy ,VKV Pictures ,A.R. Suresh Babu ,M. Sathish Kumar ,Sonia Das ,Nisha ,Nannari' Vinoth ,Deepa Shankar ,Ashok Pandian ,Thirupachchi' Benjamin ,Meesai Rajendran ,Birla Bose ,Asmita ,Jayanthi Mala ,Manimekalai ,S.Ra. Rajesh ,Jayakumar Thangavel ,Santhosh.K ,
× RELATED சினிமாவில் நிறவெறியும், உருவகேலியும் அதிகரிப்பு! சமீரா ரெட்டி வேதனை