தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகளான ஜான்வி கபூர், இந்தி படங்களில் நடித்தாலும், தென்னிந்திய படங்களிலும் அதிக கவனம் செலுத்துகிறார். சமீபத்தில் போனி கபூரின் மூத்த மகள் அன்ஷுலா கபூர், ரோஹன் தாக்கர் திருமணம் விமரிசையாக நடந்தது. சகோதரியின் திருமணத்தில் கலந்துகொண்ட ஜான்வி கபூர், தனது கைகளில் வரைந்திருந்த மெஹந்தியில், தனது காதலன் ஷிகர் பஹாரியாவின் பெயரை ‘ஷிகு’ என்று சுருக்கமாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்களை அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டபோது, நெட்டிசன்கள் அந்த மெஹந்தியை கவனித்தனர். ஜான்வி கபூர், ஷிகார் பஹாரியா தங்களது காதலை பற்றி இதுவரை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், ஒன்றிணைந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்வது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று சந்தோஷமாக இருக்கின்றனர். தற்போது மெஹந்தியில் காதலன் பெயரை குறிப்பிட்டு இருப்பது, ஜான்வி கபூர் தனது காதலை உறுதி செய்வது போல் இருக்கிறது.

