- சென்னை
- முகன் ராவ்
- பிரீதி அஸ்ரணி
- தான்யா ஹோப்
- நிதின் சத்யா
- சுரேகா வாணி
- கஜராஜ்
- ஸ்ரீஜித் ரவி
- சுரேஷ் சக்ரவர்த்தி
- திருநாவுக்கரசு
- கே. பிந்து மாதவி
- பி. ராஜேஷ்
- கே ஸ்கொயர் சினிமாஸ்
- பலராம் கிருஷ்ணா
- இம்மன்
- சான்டோனியோ டெர்சியோ
- Mohanraja
- மனு
சென்னை: முகேன் ராவ், பிரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, திருநாவுக்கரசு நடித்துள்ள படம், ‘நிறம்’. கே ஸ்கொயர் சினிமாஸ் சார்பில் கே.பிந்து மாதவி, பி.ராஜேஷ் தயாரித்துள்ளனர். பலராம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். இமான் இசை அமைக்க, சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் குறித்து பலராம் கிருஷ்ணா கூறியதாவது:
இயக்குனர் மோகன் ராஜா, மானு நடித்த ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற படத்தின் இயக்குனர் குரு ரமேஷிடம் பணியாற்றினேன். இப்போது வடநாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘நிறம்’ என்ற ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி படத்ைத இயக்கியுள்ளேன். 6 பேரை மையமாக கொண்ட இதில் நடக்கும் சம்பவங்கள், இறுதியில் ஒன்றுடன் ஒன்று இணையும். மெடிக்கல் கிரைம் திரில்லர்’ என்றார்.
