×

டேட்டிங் செயலியில் கணவர் பெயர்: ரகுல் பிரீத் கடும் அதிர்ச்சி

மும்பை: தென்னிந்திய படவுலகில் மட்டுமின்றி, இந்தியிலும் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர் களில் நடிப்பவர், ரகுல் பிரீத் சிங் (33). பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியை (39) கடந்த 2024 பிப்ரவரியில் காதல் திருமணம் செய்து கொண்டார். பிறகு ஜாக்கி பக்னானி அளித்த பேட்டியில், தங்கள் உறவை ‘சிச்சுவேஷன்ஷிப்’ என்று காமெடியாக பேசியது பலத்த சர்ச்சைக்குள்ளானது.

இதுகுறித்து ரகுல் பிரீத் சிங், ‘ஒரு மணி நேர உரையாடலில் இருந்து ஒரு வரியை மட்டும் எடுத்து தலைப்பாக மாற்றுவது வருத்தம் அளிக்கிறது. எங்கள் பேச்சை அதன் சூழ்நிலையுடன் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று விளக்கம் அளித்தார். கொரோனா பரவிய காலத்தில் காதலிக்க தொடங்கிய இந்த இளம் ஜோடி, கடந்த ஆண்டுதான் தங்களின் மணவாழ்க்கையை தொடங்கினர்.

இந்நிலையில், பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் பயன்படுத்தும் ‘ராயா’ என்ற டேட்டிங் செயலியில் ஜாக்கி பக்னானியின் போட்டோ இருப்பதாக சொல்லி, ஒரு ஸ்கிரீன்ஷாட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த செயலியில், ஜாக்கி பக்னானியை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்று குறிப்பிட்டு, அவருடைய இருப்பிடம் லண்டன் என்று பதிவிடப்பட்டுள்ளது.

இது ஜாக்கி பக்னானியின் உண்மையான கணக்கா அல்லது அவரது பெயரில் யாராவது உருவாக்கிய போலி கணக்கா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. ஏற்கனவே தனது திருமண உறவு குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது டேட்டிங் செயலி விவகாரமும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், ரகுல் பிரீத் சிங் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Tags : Rakul Preet ,Mumbai ,Rakul Preet Singh ,Bollywood ,Jackie Bhangnani ,
× RELATED லவ் அண்ட் வார் மீண்டும் இணைந்த ‘96’ ஜோடி