×

சூர்யா, ஜோதிகா பாராட்டிய ‘பாலன்’

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிதம்பரம் எஸ்.பொதுவால் எழுதி இயக்கியுள்ள சைக்கலாஜிக்கல் திரில்லர் படம், ‘பாலன்: தி பாய்’. கடந்த 14ம் தேதி திரைக்கு வந்த இப்படத்துக்கு இயக்குனர் ஜித்து மாதவன் கதை எழுதியுள்ளார். தற்போது அவர் சூர்யா நடிக்கும் 47வது படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ‘பாலன்: தி பாய்’ படத்தை பார்த்த சூர்யா வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘சமீபத்தில் ‘பாலன்’ படத்தை பார்த்துவிட்டு என்னால் அதிலிருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்துக்கு பிறகு இப்படியொரு படத்தை உருவாக்கி சிதம்பரமும், அவரது குழுவும் தாங்கள் யார் என்பதை நிரூபித்துள்ளனர். நடிப்பு, இயக்கம், கதை, இசை, ஒளிப்பதிவு உள்பட அனைத்து பணிகளும் சிறப்பாக இருக்கிறது. அந்த புதுமுக நடிகர்களை பார்க்கும்போது, எனது நடிப்பை இன்னும் மெருகேற்ற வேண்டுமோ என்று எனக்கு தோன்றுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஜோதிகாவும் ‘பாலன்: தி பாய்’ படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Tags : Suriya ,Jyothika ,Chidambaram S. Pothuval ,Jithu Madhavan ,
× RELATED கவர்ச்சியை தவறாக பார்க்க வேண்டாம்: ரகுல் பிரீத் சிங்