×

திருவள்ளூர் புங்கத்தூரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 38ம் ஆண்டு தீ மிதி திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே புங்கத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் 38ம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 29ம்தேதி தாய் விட்டு சீர்வரிசையும் கிராம தேவியை அழைத்து வருதலும் 30ம் தேதி காப்பு கட்டுதலும் குங்கும அர்ச்சனை மற்றும் அம்மன் கரகம் வீதி உலாவும் நடைபெற்றது. 31 ம் தேதி பால்குடம் எடுத்தல், பாலாபிஷேகம், கூழ் ஊற்றுதல், பூ கரகம் சுற்றி வருதல், பொங்கல் வைத்து படையல் போடுதல், அலகு குத்தல், அம்மனுக்கு மாலை போடுதல், தீச்சட்டி ஏந்தி வருதல், அம்மனுக்கு மாலை போடுதல், இரவு நாடகமும் நடைபெற்றது.

1ம் தேதி அம்மனுக்கு சந்தன காப்பும் அன்னதானமும், விளக்கு பூஜையும் நடந்தது. நேற்று அலகு பானை எடுத்து வருதலும் நடைபெற்றது. இதன்பிறகு மாலை 6 மணியளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த 180 பக்தர்கள் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதன்பின்னர்அம்மன் வீதி உலாவும் கும்பம் போட்டு வணங்குதலும் தெருக்கூத்து நாடகமும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது.

விழாவில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் இரா.தாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை வி.எம்.தாஸ், முருகேசன், மூர்த்தி, குகன், விஞ்சி கபாலி, சக்கரபாணி, குணசேகரன் உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags : Thiruvallur ,38th Thimithi festival ,Sri Muthumariamman temple ,Pungathur ,Tiruvallur ,Kumkuma ,
× RELATED காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு