×

கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் அளவு 27 ஆயிரம் கன அடியாக உயர்வு

 

மேட்டூர்: கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் அளவு 27 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலைக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி உள்​ளிட்ட பகு​தி​களில் தென்​மேற்​கு பரு​வ​மழை, கடந்த 2 மாதமாக வழக்கமான அளவு பெய்​ய​வில்​லை. இதனால், காவிரி ஆற்​றின் குறுக்கே உள்ள கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி, ஹேமாவ​தி, ஹாரங்கி ஆகிய 4 அணை​களிலும் நீர்மட்டம் குறைவாக இருந்தது. இதனால், உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி கடந்த ஜூன், ஜூலை மாதங்​களில் தமிழகத்​துக்கு திறக்க வேண்​டிய நீரை, கர்​நாடக அரசு திறக்​க​வில்​லை.

இது குறித்து தமிழக அரசு கடந்த 28ம் தேதி, காவிரி ஒழுங்​காற்​றுக் குழு கூட்​டத்​தில் முறை​யிட்​டதை அடுத்​து, 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து​ விட வேண்​டும் என ஒழுங்​காற்​றுக் குழு உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணை​யத்​தில், கர்​நாடக அரசு மேல்​முறையீடு செய்​தது. கர்​நாட​கா​வின் கோரிக்​கையை நிராகரித்த மேலாண்மை ஆணை​யம், தமிழகத்​துக்கு 15 நாட்​களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்​து ​விடு​மாறு உத்​தர​விட்​டது. ஆனாலும், தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு தெரிவித்தது. காவிரி நீர் பங்​கீட்டு விவ​காரத்​தில், தமிழகம்-கர்​நாடகா இடையே மோதல் முற்​றி வந்த நிலையில், கடந்த 31ம் தேதி முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகு​தி​களில் கனமழை பெய்து வருகிறது.

காவிரி உற்​பத்​தி​யாகும் தலைக்​கா​விரி​, கர்நாடக மாநிலம் வயநாட்டில், கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை கொட்​டியதால், ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது. மைசூரு மாவட்​டம், எச்​.டி.கோட்​டை​யில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து மளமளவென அதிகரித்தது. கடல் மட்​டத்​தில் இருந்து 2,284 அடி உயரத்​தில் உள்ள க‌பினி அணை​யின் நீர்​மட்​டம், நேற்று முன்தினம் பிற்​பகல் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணை உடையாமல் இருக்கவும், மக்கள் வெள்ளத்தில் சிக்காமல் இருக்கவும் கபினி அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த அணையில் இருந்து, நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இரவில் 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று 25ஆயிரம் கன அடியாக இருந்த நீர்த்திறப்பு இன்று 27ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 84 அடியுடைய கபினி அணையின் இன்றைய நீர்மட்டம் 82.59 அடியாக உள்ளது

Tags : Karnataka ,Kabini dam ,Cauvery ,Thalaikkaveeri ,Bhagamandala ,Madikeri ,
× RELATED இடைத்தேர்தலுக்காக காத்துக்கொண்டு...