கேரளம் மழையில் சிக்கித் தவிக்கும்போது முஸ்லிம் லீக் தலைவர் வீட்டில் தடபுடல் விருந்து சாப்பிட்ட முதல்வர் வி.டி.சதீசன்: கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் கண்டனம்

திருவனந்தபுரம்: கேரளத்தில் பெய்த பலத்த மழைக்கு 12 பேர் உயிரிழந்தனர். 5 பேரை காணவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் கேரள முதல்வர் வி.டி.சதீசன், மலப்புரம் மாவட்டம் பொன்னானியில் உள்ள இளைஞர் முஸ்லிம் லீக் துணைத் தலைவரான பைசல் என்பவரின் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டது கேரளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் வி.டி. சதீசன் விருந்தில் கலந்து கொண்டு சாப்பிடும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வெள்ளத்தில் மக்கள் சிக்கித் தவிப்பதை கண்டு கொள்ளாமல் முதல்வர் மகிழ்ச்சியுடன் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது இது மக்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று மார்க்சிஸ்ட் எம்பி ரஹீம், முன்னாள் எம்எல்ஏ பிரசாந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் ஏராளமானோர் வி.டி. சதீசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: