சியூட்டா: மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினுக்குள் நுழைய முயலும் குடியேறிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. உயிரிழந்த 41 பேரில் சிலர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், மற்றவர்கள் மொராக்கோ சோதனைச் சாவடிக்கு அருகிலுள்ள தராஜல் கடற்கரையில் அலைத்தடுப்பு வேலியைத் தாண்ட முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
