பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதியானவர்கள் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 

பெரம்பலூர்,ஜூலை.31: பெரம்பலூர் மாவட்டத்தில் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் வழங்கிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது : வருகிற 2027ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் பெறக்கூடிய, 2026 ஆம் ஆண்டிற்கான, ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இந்திய அரசின் சார்பாக பல்வேறு நிகழ்வுகளான, நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்குகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் என்ற விருதும், துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளவரை போராடி மீட்பவர்களுக்கு உத்தம் ஜீவன் பதக்கம் என்ற விருதும், தனக்கு காயம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என தனதுநிலையைப் பொருட்படுத்தாமல் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரைக் காப்பாற்றும் நபர்களுக்கு ஜீவன் ரக்க்ஷா பதக்கம் என்ற விருதும் வழங்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதிற்கு < https://awards.gov.in/ > என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் அல்லாது நேரிலோ அல்லது வேறு இணையதளங்களிலோ விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்புகள் இன்றி நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற ஆக- 15ஆம் தேதி மாலை 5-மணிஆகும். எனவே, ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள சிறப்பான சாதனைகள் புரிந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டுமாறும், இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703516 என்ற தொலைப் பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், மாவட்டக் கலெக்டர் ஷரண்யா அறி வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: