×

தோட்ட உரிமையாளரை தாக்கிவிட்டு தேங்காய் திருடிய இருவர் கைது

 

தேவதானப்பட்டி, ஜூலை 31: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பொன்னையா தெருவை சேர்ந்தவர் தவராஜா (49)இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு கெங்குவார்பட்டியில் இருந்து பட்டிமந்தை ரோட்டில் அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்னால் பறித்து குவித்து வைத்துள்ளனர். பின்னர் நேற்று தென்னந்தோப்பிற்கு சென்றபோது கெங்குவார்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (22) மற்றும் வடக்கு தெருவை சேர்ந்த செல்வா (28) ஆகிய இருவரும் சுமார் 150 தேங்காய் திருடிக் கொண்டு டூவீலரில் வந்து கொண்டிருந்தனர்.

இதை பார்த்த தவராஜா டூவீலரை மறித்துள்ளார். அப்போது சந்தோஷ் குமார் மற்றும் செல்வா ஆகிய இருவரும் தவராஜாவை தாக்கி விட்டு தேங்காயைக் கொண்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த தவராஜா மருத்துவமனை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் சந்தோஷ் குமார் மற்றும் செல்வா மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Devadhanapatti ,Thavaraja ,Ponnaiya Street, Kenguvarpatti ,Pattimandhai Road ,Kenguvarpatti ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...