- பாகிஸ்தான்
- காஷ்மீர்
- இந்தியா
- நியூயார்க் டைம்ஸ்
- புது தில்லி
- நியூயார்க் டைம்ஸ்
- பாக்கிஸ்தான்
- பாகிஸ்தான் காஷ்மீர்
புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் காஷ்மீர் என்று வர்ணித்ததற்காக நியூயார்க் டைம்ஸைக் கண்டித்து இந்தியா அறிக்கை வெளியிட்டது.1947ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுமே காஷ்மீர் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி வருகின்றன. இந்த மாதத் தொடக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியா இந்த விவகாரத்தை எழுப்பியது. ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருந்து வருகிறது, இப்போதும் அப்படித்தான் இருக்கிறது, இனியும் அப்படித்தான் இருக்கும் என்று இந்தியா கூறியது.
இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ‘‘பாகிஸ்தான் காஷ்மீர்” என்று வர்ணித்ததற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இதை கண்டித்து அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம், அந்தத் தலைப்புக்குத் தனது அதிருப்தியை எக்ஸ் தளத்தில் வெளிப்படுத்தியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் தவறான மற்றும் திசைதிருப்பும் தலைப்பு.
பாகிஸ்தான் காஷ்மீர் என்று எதுவும் இல்லை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டுமே உள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகின்றன, இருக்கின்றன, எப்போதும் அப்படியே இருக்கும். பாகிஸ்தான் இந்தப் பிரதேசங்களின் சில பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதுடன், தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
