×

முத்துப்பேட்டை அருகே ஒரு மாதமாக குடிநீர் வராததை கண்டித்து காலி குளங்களுடன் மக்கள் சாலை மறியல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த வட சங்கேந்தி, அரியலூர், குமாரபுரம் பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட மூலம் வழங்கப்பட்ட குடிநீர் கடந்த ஒரு மாதமாக வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று மாலை சங்கேந்தி கடத்தெருவில் விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டை – திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : Muthupettai ,Thiruvarur ,North Sankendi ,Ariyalur ,Kumarapuram ,Kollidam ,Sankendi ,
× RELATED கூடுதல் மின் கட்டண புகார் தொடர்பான...