சென்னை: கூடுதல் மின் கட்டண புகார் தொடர்பான மின் இணைப்புகளை மறுகணக்கீடு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளார். ஜூலை மாதத்தில் பல்வேறு இடங்களில் அதிக மின்கட்டணம் வந்ததாக நுகர்வோர் புகார் எழுப்பினர். மே மாதத்தை விட ஜூலையில் 3.7 லட்சம் மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வந்தது உறுதியானது. புகாரை அடுத்து ஆய்வு செய்ததில் மின் கணக்கீட்டில் குளறுபடி நடந்தது அம்பலமாகி உள்ளது. 5, 6 இடங்களில் மட்டுமே மின்கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியிருந்தார். சாதாரண பயன்பாட்டுக்கே கூடுதல் கட்டணம் வந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மறுகணக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
