×

உத்தமபாளையம் நகர் சாலையில் ஒளிராத மின்விளக்குகளால் தொடரும் வாகன விபத்துகள்; அதிகாரிகள் கவனிக்க வேண்டும்

 

உத்தமபாளையம், ஜூலை 29: உத்தமபாளையத்தில் உள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் வாகன விபத்துகள் அதிகரிப்பதாக, பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்தமபாளையம் நகருக்குள் மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலைகள் பிரிகின்றன. இவற்றில் உத்தமபாளையம் பழைய பைபாஸ் சாலையில் இருந்து பிடிஆர் காலனி, குத்பா பள்ளி சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக டூவீலர்கள் அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. இதில் பழைய பைபாஸ் சாலை முதல் பிடிஆர் காலனி குத்பா பள்ளி வரை உத்தமபாளையம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.

 

Tags : Uttampalayam ,Uttampalayam… ,
× RELATED திமுக ஆட்சி சாதனைகள் விளக்கி...