சமூகநீதி விடுதியில் கலெக்டர் ஆய்வு

 

திருப்பூர், ஜூலை 29: திருப்பூர் ஓடக்காடு பகுதியில் சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் நேற்று கலெக்டர் மனிஷ் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம், அறைகள் முறையாக குடிநீர், கழிவறை வசதி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாணவர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். இதனை உடனே சரிசெய்து தருவதாகவும் அவர்களுக்கு உறுதியளித்தார்.
உடுமலை குப்பம்பாளையம் பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை கலெக்டர் திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் பொன்னுத்தாய், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கொழுமம் தாமோதரன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: