பாடாலூர்: கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக நினைத்து பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் கழுதை பால் ஒரு சங்கு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த பாலை ஏராளமானோர் வாங்கி குடித்தனர்.
