அல்பானி: நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகளைத் திறந்து, காய்கறிகள், இறைச்சி, மீன்கள், பால் உள்ளிட்ட பொருட்களை 30% தள்ளுபடி விலையில் விற்க உள்ளதாக மேயர் ஜோஹ்ரன் மம்தானி அறிவித்துள்ளார். அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க, நியூயார்க் மக்களுக்கு உதவியாக நகரின் 5 மண்டலங்களிலும் இக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.
