×

சபரிமலையை தொடர்ந்து குருவாயூர் கோயிலும் கடும் முறைகேடுகள் : கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தணிக்கை அறிக்கையில் தகவல்

 

திருவனந்தபுரம்: குருவாயூர் கோயிலில் சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்குத் தணிக்கை அறிக்கை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குருவாயூர் கோயிலில் உள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட மதிப்பு மிக்க பொருட்களுக்கு கடந்த 43 ஆண்டுகளாக ஆண்டு தோறும் நேரடி இருப்பு சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட வில்லை என்றும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள், ஆன்லைன் பூஜை காணிக்கைகள், இ-உண்டியல் மற்றும் கார்டுகள் மூலம் பெறப்படும் வரவுகளின் கணக்குப் பராமரிப்பிலும் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2011-12 முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில் ரூ. 54.59 கோடி மதிப்பிலான தணிக்கை ஆட்சேபனைகள் நிலுவையில் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், மூத்த துணை இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Tags : Sabarimala ,Guruvayur temple ,Kerala High Court ,Thiruvananthapuram ,
× RELATED மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும்...