×

கண்டிகை அருகே நின்றிருந்த லாரி மீது பால் வேன் மோதல்: 2 வாலிபர்கள் பரிதாப பலி

 

திருப்போரூர், ஜூலை 27: கண்டிகை நெல்லிக்குப்பம் சாலை சந்திப்பில் நின்றிருந்த டாரஸ் லாரியின் பின்புறத்தில் பால் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலக்கோட்டையூர் அருகே நேற்று அதிகாலை 2.45 மணியளவில் டாரஸ் லாரி ஒன்று சாலையின் நடுத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி அங்கேயே நின்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில், தனியார் பால் குளிரூட்டும் வேன் அதே வழியாக வந்தபோது, நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் பலத்த வேகத்தில் மோதியது. இதில் வேனில் பயணித்த திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா, தண்டலைபுதூரைச் சேர்ந்த ஜான் குமார் (25), கடலூர் மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சிவராஜன் (23) ஆகியோர் வாகனத்துக்குள் சிக்கி, தலையில் பலத்த காயம் மற்றும் உடலில் பல்வேறு எலும்பு முறிவுகளால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த சிறுசேரி சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் இருவரின் உடல்களையும் மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kandygai ,Thiruporur ,Kandygai-Nellikuppam road ,Taurus ,Melakottaiyur ,
× RELATED அரசினர் பாதுகாப்பு இடம், சிறார்...