பீஜிங்: தெற்கு சீனாவில் நவுல் புயல் நேற்று கரையை கடந்தது. அப்போது பெய்த மழை, வௌ்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகினர். சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில், ஹூய்ஜோ மற்றும் ஷான்வே அருகே நவுல் புயல் நேற்று காலை கரையை கடந்தது. அப்போது, 162 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், கன மழையும் பெய்தது. கன மழையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர்.
