×

ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய விவகாரம் தோழியுடன் சேர்ந்து தவெக பிரமுகரை சிக்க வைத்த நண்பர்: பரபரப்பு தகவல்கள்

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி சின்னபுத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன் (39). தவெக பிரமுகரான இவர் மளிகை கடை வைத்துள்ளார். இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் தகாத உறவு கொண்டதுடன், அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளதாகவும், அதனை வைத்து பெண்களை விபசாரத்திற்கு தள்ளிவிடுவதாகவும் பெண் ஒருவர் சமூகவலைதளங்களில் தெரிவித்தார். இதன் அடிப்படையில், கொண்டலாம்பட்டி போலீசார், மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவரிடம் இருந்த செல்போனில் 3 பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது. இதில் ஒரு பெண் மட்டும் புகார் கொடுத்தார். மற்ற 2 பெண்களும் புகார் கொடுக்க முன்வரவில்லை. வீடியோ வெளியிட்ட பெண்ணை முக்கிய பிரமுகர் ஒருவர் மறைத்து வைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்து விட்டார். வந்து ஒரே வாரத்தில் இன்னொரு பெண் விவகாரத்தில் கைதாகி சிறைக்கு சென்று விட்டார். ஆனால் அந்த பெண்ணும், மணிகண்டன் தன்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டுவதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மணிகண்டனை சிக்க வைத்தது யார்? என்ற முழுவிவரத்தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மளிகை வியாபாரியான மணிகண்டனை பொறுத்தவரையில் தவறான தொடர்பில் அதிக ஆர்வம் கொண்டவர். பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த இவரது நண்பரிடம் குறிப்பட்ட தொகையை கொடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மணிகண்டனுக்கு பெண்களுடன் நெருங்கி இருக்கும் காட்சிகளை செல்போனில் எந்த பகுதியில் லாக் செய்து வைக்க வேண்டும் என்று தெரியாது. இவர் உயிருக்கு உயிராக நேசித்த நண்பரிடம் செல்போனை கொடுத்து விவரத்தை தெரிவித்துள்ளார். ஆனால் இதை நன்றாக பயன்படுத்தி கொண்ட நண்பரோ, அந்த காட்சிகளை அவரது செல்போனுக்கு அனுப்பி வைத்துக்கொண்டார். இதற்கிடையில் தான் கொடுத்த பணத்தை மணிகண்டன் கேட்டுள்ளார்.

7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மணிகண்டனை பெண்கள் ஆபாச வீடியோக்களை வைத்து சிறைக்கு தள்ள திட்டமிட்ட அவர், நண்பர்கள் மூலமாக எல்லா வேலையையும் செய்தது தெரியவந்துள்ளது. பணம் என்று கேட்டாலே சிறைக்கு தான் போக வேண்டும் என அவருக்கு தெரியாமலே அவரது நண்பர் மிரட்டி வந்துள்ளார். தனது செல்போனின் ரகசிய நம்பர், நண்பருக்கு மட்டும் தான் தெரியும் என சிறைக்கு சென்ற பிறகு தான் நினைவுக்கு வந்து போலீசாரிடம் தெரிவித்தார்.

அதே நேரத்தில் காணொலியில் பேசியது யார்? என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த பெண்ணும், மணிகண்டனின் நண்பரின் நெருங்கிய தோழி என்பதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் பெரிய நாடகம் ஒன்றை நடத்தி போலீசாரை ஏமாற்றியுள்ளனர். போலீசார் நெருங்கியதும் மணிகண்டன் நண்பர் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : Thaweka ,Salem ,Manikandan ,Chinnaputhur ,Kondalambatti, Salem ,
× RELATED கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில்...