×

சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட மே 17 இயக்கத்தினர் கைது

சென்னை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி மே 17 இயக்கம் சார்பில் நேற்று சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என மே 17 இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சாஸ்திரி பவன் அருகே துணை கமிஷனர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காலை 11 மணிக்கு மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சாஸ்திரி பவன் அருகே கூடினர். போலீசாரின் தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Tags : May 17 Movement ,Shastri Bhavan ,Chennai ,May 17 ,Movement ,Union Minister ,Dharmendra Pradhan ,NEET ,Shastri… ,
× RELATED கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில்...