×

கள்ளத்தனமாக மது விற்றவர் கைது ; 30 பாட்டில்கள் பறிமுதல்

 

சேந்தமங்கலம், ஜூலை 24: புதுச்சத்திரம் அடுத்த தெத்துக்காடு கருப்பணார் கோயில் அருகே, முள்ளுக்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் வசந்தா தலைமையில், போலீசார் அங்கு சென்று மது விற்பனை செய்து கொண்டிருந்த திருமலைப்பட்டி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பாஸ்கர் (57) என்பவரை கைது செய்து, 30 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில், பாஸ்கர் மதுபாட்டில்களை டூவீலர் மூலம் நேரடியாக குடிமகன்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு சென்று கொடுத்து வருவதை வழக்கமாக கொண்டிருப்பது தெரியவந்தது.

Tags : Senthamangalam ,Puduchattaram police ,Mullukadu ,Thethukadu Karuppanar Temple ,Puduchattaram ,Inspector ,Vasantha ,
× RELATED கடைகளில் சோதனை என்ற பெயரில் மிரட்டல்