புதுடெல்லி: ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை, நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித் வென்றுள்ளார். மாதம்தோறும் ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனைக்கு விருது வழங்குவது வழக்கம். அதன்படி ஜூன் மாதத்தில் சிறந்த வீரராக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்தின் நாதன் ஸ்மித் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நியூசிலாந்து
அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் உள்ளிட்ட போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி ஐசிசி ஜூன் மாதத்தின் சிறந்த வீரர் விருதை நாதன்ஸ்மித் தட்டி சென்றுள்ளார். இதேபோல், ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை, 2026 மகளிர் டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை டானி வியாட்-ஹாட்ஜ் வென்றுள்ளார்.
