- இந்திய மாணவர் சங்கம்
- யூனியன்
- அமைச்சர்
- நாகப்பட்டினம்
- சோனம்
- தில்லி
- கல்வி அமைச்சர்
- தர்மமேந்திர பிரதான்
- நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல்…
நாகப்பட்டினம், ஜூலை21: நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலகக் கோரி டில்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அறிவியல் அறிஞர் சோனம் ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் மித்ரன் தலைமை வகித்தார்.
நாகப்பட்டினம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பேரணி தொடங்கி நீதிமன்ற சாலை, தாமரைக் குளம் வழியாக கல்லூரி வளாகத்தை அடைந்தது. நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகளுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலகக்கோரி டில்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அறிவியல் அறிஞர் சோனம் ஆதரவு அளிப்பது. பிரதமர் மோடி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது. கிராமபுற மாணவர்களின் கல்வியை கேள்விகுறியாக்கும் ஒன்றிய அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில குழு உறுப்பினர் புவனேஸ்வரி பேரணியை தொடங்கி வைத்தார், போராட்டத்தை விளக்கி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முகேஷ்கண்ணன், மாவட்ட தலைவர் முகேஷ்ராஜன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமிர்தேஸ், கார்த்திக் நன்றி கூறினார்.
