விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் கார் மீது கல்வீச்சு சி.வி.சண்முகம் மீது போலீஸ் வழக்கு பதிவு

 

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றிய அதிமுக கூட்டத்தில் பங்கேற்க விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி நேற்று முன்தினம் அங்கு வந்தார். அப்போது சி.வி.சண்முகம் தரப்பினர் கூட்டம் நடத்தவிருந்த இடத்திற்கு வெளியே நின்று கோஷமிட்டு பசுபதியை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் செஞ்சி போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். பசுபதி தரப்பை சேர்ந்த சேட்டு என்கிற கணேசன் கொடுத்த புகாரின்பேரில், சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 8 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.அதேபோல் சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த கீழ்மாம்பட்டு நடராஜன் என்பவர் அளித்த புகாரின்மீது, அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி உள்ளிட்ட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் பசுபதி கார் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் அளித்த மற்றொரு புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் மற்றும் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்பட 20 பேர் மீது கலரவத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், கல்வீசி தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: