உயர் கல்வி துறை முறைகேடு பல்கலை துணைவேந்தர்கள் சிறைக்கு செல்ல நேரிடும்: மேற்கு வங்க மாநில பாஜ அரசு எச்சரிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்க உயர் கல்வி அமைச்சர் ஜெகன்னாத் சட்டோபாத்யாய் அளித்த பேட்டியில், “மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஊழல்களை ஒழிப்பதும், அரசியல் செல்வாக்குகளை முடிவுக்கு கொண்டு வருவதும் பாஜ அரசின் முதன்மையான நோக்கம். ஊழலற்ற கல்வி நிர்வாகம் மற்றும் அரசியலற்ற கல்வி முறையை உருவாக்குவதே முதல் முன்னுரிமை. திரிணாமுல் ஆட்சியில் கல்விசார் சிறப்புக்கு பதிலாக ஊழல் வளர்க்கப்பட்டது.

முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் கல்வி துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. முன்னாள் கல்வி அமைச்சர் ஒருவர் சிறைக்கு சென்றதை நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சிறைக்கு செல்வதை நீங்கள் இனி பார்ப்பீர்கள். உயர் கல்வி துறை ஊழல் விவகாரத்தில் துணைவேந்தர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படலாம்” என தெரிவித்தார்.

Related Stories: