பைக்குகள் மோதல் : தொழிலாளி பலி

 

 

செங்கல்பட்டு, ஜூலை 16: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (50). இவர் சென்னை போரூரில் உள்ள ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 12ம் தேதி மாலை கருநிலத்தில் இருந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். கோவிந்தாபுரம் டாஸ்மாக் கடை அருகில் சென்றபோது எதிரே 2 சிறார்கள் மற்றொரு பைக்கில் அதிவேகமாக வந்தனர்.

சிறுவர்கள் வந்த பைக் ரவியின் பைக்மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ரவியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கூடுவாஞ்சேரியில் செயல்பட்டு வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: