மதுரை, ஜூலை 15: செம்மொழித் தமிழுக்கு முதல் குரல் கொடுத்த தமிழறிஞர் பரிதிமாற்கலைஞரின் 156வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, மதுரை விளாச்சேரி நினைவு இல்லத்தில் நேற்று கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் எம்எல்ஏ க்கள் கார்த்திகேயன், கோபிசன், வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன், பிஆர்ஓ வெற்றிவேந்தன், ஏபிஆர்ஓ வினோத், தாசில்தார் தவமூர்த்தி, திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி காந்தம், அரசு உயர் அலுவலர்கள், தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
