திருவாரூர், ஜூலை 15: திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் ரூ36 ஆயிரம் மதிப்புடைய கஞ்சா வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணபவகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ரயில்வே ஸ்டேஷன் குட்செட் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்தனர். அவரிடம் ரூ 36 ஆயிரம் மதிப்புடைய 3 கிலோ 600 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
அவரிமிருந்து கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தவாலிபர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த சூர்யா என்கின்ற சந்திரசேகரன் (26) என்பது தெரியவந்தது. சந்திரசேகரனை கைது செய்து நன்னிலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை கிளை சிறையில் அடைத்தனர்.
