×

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி

எட்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 258 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் லியாம் டாசன் 68 ரன்களை எடுத்தார். இந்திய அணி சார்பில் அக்சர் படேல் 9.5 ஓவர்களில் 62 ரன்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

259 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 262 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கில் 80 ரன்களையும், வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களையும், அக்சர் படேல் 57 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். ஆட்ட நாயகனாக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது

Tags : Indian ,England ,Edbaston ,Birmingham ,England team ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்...