×

ரத்தினம் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கோவை, ஜூலை 14: கோவை ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில் கல்லூரியின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. ரத்தினம் கல்வி குழுமங்களின் தலைவரும், ரத்தினம் நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். ரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குனர் சீமா செந்தில், துணைத்தலைவர் மாணிக்கம், ரத்தினம் நிகர்நிலைப் பல்கலைக்கழக பொறுப்புத் துணை வேந்தர் பா.நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் கீதா வரவேற்றார். ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் உதவி துணைத் தலைவர் அருண்குமார் உள்பட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், தன்னம்பிக்கைப் பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மனிதனுக்கு வாழ்வில் தன்னம்பிக்கை மிக அவசியம். நம்பிக்கை கொண்ட மனிதனே வாழ்வில் அனைத்து தடைகளையும் கடந்து வெற்றி அடைகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் லட்சியம் வேண்டும். அந்த இலட்சியத்தை நோக்கி அவன் தினந்தோறும் பயணிக்க வேண்டும் என்றார்.

Tags : Rathinam College ,Coimbatore ,Rathinam ,Technical Campus ,Rathinam Educational Groups ,Rathinam Deemed University ,Madan.A.Senthil ,Rathinam Educational… ,
× RELATED பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி...