×

ரூ.100 கோடி நில பத்திரப்பதிவு விவகாரம்: பழநி சார்பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்

 

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரம் ஆண்டவன் பூங்கா சாலையில் தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. பழநி மலைக்கோயிலுக்கான கைங்கர்யம் நடக்கும் இந்த இடத்தை திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் கடந்த ஜூலை 7ம் தேதி ரூ.2 கோடிக்கு தனியார் இருவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் பழநி அடிவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் போலீசார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை கிரையம் செய்து கொடுத்த முருகதாஸ், கிரையம் பெற்றவர்களான வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோர் மீது மோசடி ஆவணம் தயாரித்தல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முதல்கட்ட விசாரணை துவக்கினர். இது தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Palani ,Dandapani Swamigal Math ,Andavan Park Road, Palani, Dindigul district ,Palani hill temple ,Thiruppugazh Swamigal ,Murugadoss ,Swamigal ,
× RELATED கோயில் விழாவில் ஆடல், பாடல்...