திருப்பூர், ஜூலை 13: திருப்பூர் ஊத்துக்குளி முதல் விஜயமங்கலம் வரை செல்லும் சாலையை அகலப்படுத்த கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பூர், ஊத்துக்குளி முதல் விஜயமங்கலம் வரை செல்லும் ரோட்டில் தினசரி ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இதனால் இந்தசாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.இந்த சாலையில் கடந்த 10ம் தேதி டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த சாலை குறுகலாக இருப்பதால் அவ்வப்போது விபத்துகள் நடைபெறுகிறது. எனவே நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
