×

நான் ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை. ஓடி ஒளிவது திமுகவினரின் பழக்கம் அல்ல: எ.வ.வேலு பேட்டி

சென்னை: சிங்கப்பூர் மருத்துவமனையில் 10 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியளித்துள்ளார். மேலும் ‘2016 முதல் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். நான் ஓடவில்லை, ஒளியவில்லை, பதுங்கவில்லை. ஓடி ஒளிவது திமுகவினரின் பழக்கம் அல்ல. சிங்கப்பூர் செல்ல கடந்த மாதம் 15ம் தேதியே விசாவுக்கு விண்ணப்பித்தேன். 15ம் தேதி விண்ணப்பித்து விசா கிடைத்தவுடன் 17ம் தேதி டிக்கெட் எடுத்தேன். சிங்கப்பூர் புறப்பட்டுக் கொண்டிருந்த அன்றுதான் போலீசார் சோதனைக்கு வந்தார்கள். போலீசார் சோதனைக்கு வந்ததால் சிங்கப்பூர் பயண டிக்கெட்டை மாற்றி புக் செய்தேன்” எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

Tags : Velu ,Chennai ,Former Minister ,Singapore ,
× RELATED பெரம்பலூர் அருகே இரூர் கல்குவாரியில்...