×

முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை

 

திருச்சி, ஜூலை 10: தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் கரூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருச்சிக்கு வருகை தரவுள்ளதையொட்டி பாதுகாப்பு கருதி இன்று (ஜூலை 10) ஒரு நாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருச்சி கலெக்டர் பிரத்திக் தாயள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் செல்கிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி இன்று (ஜூலை 10) ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.

 

Tags : Chief Minister ,Trichy ,Tamil Nadu ,Joseph Vijay ,Karur ,District Collector ,
× RELATED கஞ்சா விற்ற 3 பேர் கைது