- மாமல்லபுரம் பிடாரி ரதம் வளாகம்
- மாமல்லபுரத்தில்
- மாமல்லபுரம் பிடாரி ரதம்
- மாமல்லபுரம் கருக்கடம்மன் கோயில்
- பிடாரி தேர்
- தொல்பொருள் துறை
மாமல்லபுரம்: மாமல்லபுரம் பிடாரி ரதம் வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் மரங்கள் எரிந்து நாசமானது. இரவு நேரத்தில் சம்பவம் நடந்ததால் யாரும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோயில் பின்புறம் பிடாரி ரதம் உள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிடாரி ரதம் மற்றும் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு பிடாரி ரதம் வளாகத்தில் வளர்ந்திருந்த செடி, கொடி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவி அருகில் உள்ள மரங்களும் கொழுந்துவிட்டு ஏரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மாமல்லபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் இன்பராஜ் தலைமையில் 5 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சியடித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால், அருகில் இருந்த மற்ற செடி, கொடி, மரங்களுக்கு தீபரவாமல் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ஏராளமான மரங்கள் எரிந்து சாம்பலானது. இரவு நேரம் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு வரவில்லை. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
