×

ஓணம் பண்டிகையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: ஓணம் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து மங்களூரு மற்றும் கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலம் மங்களூரு சென்ட்ரலில் இருந்து ஜூலை 13, 20, 27, ஆகஸ்டு 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 14, 21, 28, ஆகஸ்டு 4, 11, 18, 25, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் செவ்வாய்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும். 22 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்லும்.

இதேபோல், சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலில் இருந்து ஆகஸ்டு 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து ஆகஸ்டு 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரலை வந்தடையும். 16 ஏ.சி. 3-ம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில், தமிழகத்தில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக செல்லும்.

மேலும், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஆகஸ்டு 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ஆகஸ்டு 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் மதியம் 2 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலை சென்றடையும். 22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில், தமிழ்நாட்டில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (9-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

 

Tags : Onam festival ,Southern ,Railway ,Chennai ,Mangalore ,Kollam ,Southern Railway ,Mangalore Central ,Karnataka ,
× RELATED ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை...