- மதுரை
- முருகேசன்
- ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
- உயர் நீதிமன்றம்
- சமுத்திரக்குளம்
- கல்லாலங்குடி
- ஆலங்குடி தாலுகா
மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘ ஆலங்குடி தாலுகா, கள்ளாலங்குடி கிராமத்தில் உள்ள சமுத்திரக்குளம் நீர்நிலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், ஆக்கிர மிப்பை அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை நடவடிக்கையும் எடுக்காததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு தப்பிக்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. நிலத்தை அளவீடு செய்வதற்கும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்குவதற்கும் தேவையான பாதுகாப்பை புதுக்கோட்டை எஸ்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
