டெல்லி: மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் ஏற்பட்டு கப்பல் போக்குவரத்து தொடங்கியதால், இயற்கை எரிவாயு (LNG) விநியோகம் மீது விதித்திருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு நீக்கியது. எரிவாயு விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், தொழிற்சாலைகள், நுகர்வோருக்கான நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
