வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் ஐரோப்பாவில் இதுவரை 3,700 பேர் பலி

பாரிஸ்: ஐரோப்பிய நாடுகளில் வீசி வரும் கடும் வெப்ப அலை காரணமாக 3,700க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் கடந்த ஜூன் 20ம் தேதி முதல் ஜூன் 28ம் தேதி வரை கடுமையான வெப்ப அலை வீசியது. இந்த வரலாறு காணாத வெயிலின் தாக்கத்தால், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நூற்றுக்கணக்கான முதியவர்கள் உயிரிழந்த நிலையில், பிரான்சில் மட்டும் 45 வயதுக்கு மேற்பட்ட 2,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இதன் காரணமாக இந்த மூன்று நாடுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக வெப்ப அலையினால் 3,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பூமியில் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றமே இந்த அதீத வெப்பத்திற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ‘தற்போது கிடைத்துள்ள முதற்கட்ட தகவல்களை விட பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்’ என்று எச்சரித்துள்ளனர்.

Related Stories: