பனிலிங்க தரிசனம்: பக்தி பரவசத்துடன் துவங்கிய அமர்நாத் யாத்திரை 2026

ஜம்மு: 2026-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை இன்று காலை தொடங்கி உள்ளது. 57 நாட்கள் நீடிக்கும் இந்த யாத்திரைக்காக பால்தல், பஹல்காம் முகாம்களில் இருந்து பக்தர்களின் முதல் குழு அமர்நாத் புனித யாத்திரைக்கான பயணத்தை தொடங்கி உள்ளது.

தெற்கு காஷ்மீரில் இமயமலை பகு​தி​யில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்​துள்​ளது. இந்​துக்​களின் புனிதத் தலங்களில் ஒன்​றான இந்த புனித தலம், கடல் மட்​டத்​தில் இருந்து 3,888 மீட்​டர் உயரத்​தில் அமைந்​துள்​ளது. இந்த கோயி​லில் இயற்​கை​யாக தோன்​றும் பனி லிங்​கத்தை தரிசிக்க ஆண்​டு​தோறும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் புனித யாத்​திரை மேற்​கொள்வது வழக்கம்.

அனந்த்​நாக் மாவட்​டத்​தில் உள்ள பாரம்​பரி​யான 48 கி.மீ. தூர நுன்வான்​-பஹல்​காம் வழித்​தடம் மற்​றும் கந்​தர்​பால் மாவட்டத்தில் உள்ள குறுகிய ஆனால் செங்​குத்​தான 14 கி.மீ. தூரபல்​தால் வழித்தடம் மூல​மாக இந்த புனித யாத்​திரை மேற்கொள்ளப்படு​கிறது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான அமர்​நாத் புனித யாத்​திரை பஹல்​காம், பல்தால் அடிவார முகாம்​களில் இருந்து இன்று ஒரே நேரத்​தில் தொடங்கியுள்​ளது.

பஹல்​காம், பல்​தால் ஆகிய 2 முகாம்​களை நோக்கி ஜம்மு பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து முதல் பக்​தர்​கள் குழு நேற்று புறப்​பட்​டது. இவர்​களின் பயணத்தை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்​தார். ஹர ஹர மகாதேவ் உள்​ளிட்ட பக்தி முழக்​கங்​களுக்கு மத்​தி​யில்,பனி லிங்கத்தை தரிசிக்க முதற்கட்டமாக 4,800-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் வாக​னங்​களில் புறப்​பட்​டுச் சென்றனர். இந்த முதல் குழுவில் 816 பெண்கள், சாதுக்கள் உட்பட மொத்தம் 4,822 பக்தர்கள் இடம் பெற்றுள்ளனர். சுமார் 57 நாட்கள் நீடிக்​கும் இந்த யாத்திரை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடையும். இந்த ஆண்டு அமர்​நாத் யாத்​திரை செல்வதற்கு 3.90 லட்சத்திற்கும் அதி​க​மான பக்​தர்​கள் பதிவு செய்​துள்​ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: