×

சிபிஎஸ்இ தலைவர் உள்துறைக்கு மாற்றம்

புதுடெல்லி,: சிபிஎஸ்இ தலைவர் லோகண்டே பிரசாந்த் சீதாராம் மாற்றப்பட்டுள்ளார். அவர் உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். பிளஸ் 2 தேர்வில் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் முறை தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் அப்போதைய சிபிஎஸ்இ தலைவர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் தான் சீதாராம், சிபிஎஸ்இ புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

தற்போது அவர் ஒரே மாதத்தில் உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அதற்கு முன்னரே அவர் உள்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி வந்தார். சிபிஎஸ்இக்கு நிரந்தரத் தலைவர் நியமிக்கப்படும் வரை அவர் சிபிஎஸ்இ தலைவர் பொறுப்பையும் அவர் கூடுதலாக வகிப்பார்.

 

Tags : CBSE ,Home Ministry ,New Delhi ,Lokhande Prashant Sitaram ,
× RELATED கேரள அரசின் அனுமதி இல்லாமல் விழிஞ்ஞம்...